டெபிட் கார்டு இல்லாமல் யுபிஐ மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்: படிப்படியான வழிகாட்டி

நம்மில் பலர் கையில் டெபிட் கார்டை எடுக்காமல் பணம் எடுக்க ஏடிஎம் மையங்களுக்கு சென்ற அனுபவங்களை கொண்டிருக்கலாம். இப்போது ஏடிஎம் மையங்களில் டெபிட் கார்டுகள் இல்லாமல் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் அம்சம் உள்ளது. இதனை தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா வழங்குகிறது.

இந்த அம்சத்தின் பெயர் ஐ.சி.சி.டபிள்யூ. இதன் மூலம் பயனர்கள் டெபிட் கார்டுகள் இன்றி பணம் எடுக்கலாம். வங்கிகள் இந்த அம்சத்தை வழங்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏடிஎம் மோசடிகளை தடுக்கலாம் என ஆர்பிஐ நம்புவதாக தெரிகிறது.

கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி உட்பட இன்னும் சில வங்கிகளில் உள்ளது. பயனர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் யுபிஐ சேவையை வழங்கும் அப்ளிகேஷன்களை இதற்கு பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்டு இல்லாமல் யுபிஐ மூலம் பணம் எடுப்பது எப்படி?

  1. ஏடிஎம் இயந்திரத்தில் பணம் டிரா செய்வதற்கான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  2. அதில் யுபிஐ ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  3. ஏடிஎம் திரையில் க்யூ.ஆர் கோடு ஒன்று டிஸ்பிளே ஆகும்.
  4. அதை யுபிஐ சேவையை வழங்கும் அப்ளிகேஷன் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.
  5. பின்னர் எவ்வளவு பணம் தேவை என்பதை உள்ளிட வேண்டும்.
  6. தொடர்ந்து யுபிஐ பாஸ்வேர்டை கொடுத்து, பணம் எடுக்கலாம்.
  7. இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.
  8. இருந்தாலும் டெபிட் கார்டு பயன்பாட்டுக்கு உள்ள வழிமுறைகள் படியே இது இயங்கும் என தெரிகிறது. பயனருக்கு கணக்கு உள்ள வங்கியின் ஏடிஎம் மையத்தில் மாதத்திற்கு 5 முறை இலவசமாக பணம் எடுப்பது, பிற வங்கி ஏடிஎம் மையங்களில் 3 முறை இலவசமாக பணம் எடுப்பது, யுபிஐ மூலம் பணம் எடுப்பதற்கும் பொருந்தும் என தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.