தனுஷ்க குணதிலக தொடர்பான சம்பவம் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அவுஸ்திரேலிய சிட்னியில் உள்ள நீதிமன்றம் மேற்கொள்ளும் தீர்மானம் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்படும் என்றும் அந்நிறுவகம் அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட குற்றச்செயல் குறித்து குற்றவாளியாகக் காணப்பட்டால் ,சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒத்துழைப்புடன் தனுஷ்க குணதிலகவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் அந்நிறுவகம் தெரிவித்துள்ளது.
யுவதி ஒருவரை துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட மேலும் நான்கு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிட்னி பொலிசாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.