`தமிழக அரசு என்றாலே எட்டி கசப்பாக நினைக்கிறது மத்திய அரசு’– எம்.பி ஆ.ராசா

“தமிழக அரசு என்றாலே மத்திய அரசுக்கு எட்டி கசப்பாக இருக்கிறது” என திமுக எம்.பி ஆ.ராசா பேசியுள்ளார்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பம் கடம்பூர் மலைப்பகுதியில் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து குன்றி மலை கிராமத்தில் ஏற்படுத்தப்பட்ட செல்போன் கோபுரத்தை பார்வையிட்டார். இதையடுத்து அங்கு நடைபெற்ற கூட்டத்தில் ஆ.ராசா பேசினார்.
image
அவர் பேசுகையில், “ஏலஞ்சி மற்றும் மல்லியம் துர்க்கம் மலைப்பகுதியில் சாலை வசதியில்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். விரைவில் சாலை அமைக்கும் பணி நடைபெறும். அதேபோல் கடம்பூர், தாளவாடி பகுதிகளில் மலைவாழ் இன மக்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்குவதில் அதிமுக ஆட்சியில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மத்திய அரசின் பழங்குடியினர் ஆணையத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு பிடியில் பழங்குடியினர் ஆணையம் உள்ளதால் தமிழக அரசு என்றாலே எட்டி கசப்பாக மத்திய அரசு நினைக்கிறது” என்று பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.