தலைமை நீதிபதி பணி ஓய்வு; நேரலையில் ஒளிபரப்பு| Dinamalar

புதுடில்லி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித்தின் பணி நிறைவு அமர்வு நேரலையில் இன்று ஒளிபரப்பாகிறது.

உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக, 2022 ஆக., 27ல், உதய் உமேஷ் லலித், 64, பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

நாளை குருநானக் ஜெயந்தி கொண்டாடப்படுவதால், நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

எனவே, தலைமை நீதிபதி பங்கேற்கும் கடைசி நீதிமன்ற பணி நிறைவு அமர்வு இன்று நடக்கிறது.

இந்த அமர்வில், புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பீலா எம்.திரிவேதி ஆகியோரும் தலைமை நீதிபதியுடன் பங்கேற்கின்றனர்.

இந்த அமர்வு, உச்ச நீதிமன்றத்தின் இணையதளம் மற்றும் ‘யு டியூப் சேனல்’ ஆகியவற்றில் நேரலையில் ஒளிபரப்பாகிறது.

இதற்கு முன், தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா, 2022 ஆக., 26ல் பணி ஓய்வு பெற்ற நிகழ்வும், நேரலையில் ஒளிபரப்பானது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரணையை, செப்., 27ல் உச்ச நீதிமன்றம் நேரலையில் ஒளிபரப்பியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.