தினமும் செத்துப்போன பூனையுடன் தூங்கும் பிரித்தானிய இளம்பெண்! செல்லப்பிராணி மீதான காதலால் பயின்றுவரும் படிப்பு


பிரித்தானியாவில் 23 வயது இளம்பெண் தனது இறந்துபோன செல்லப்பிராணியுடன் இரண்டு ஆண்டுகளாக தூங்குகிறார்.

தனக்கு ஆறு வயதாக இருந்தபோது பூனையை செல்லப் பிராணியாகப் பெற்றதாக அப்பெண் கூறுகிறார்.

பிரித்தானியாவில் இங்கிலாந்து நகரமான Boston-ஐ சேர்ந்த Chloe Lee எனும் 23 வயது பெண் தனது இறந்துபோன செல்லப்பிராணியை இழக்க மனமில்லாததால், அதனை பதப்படுத்தி இரண்டு வருடங்களாக தன்னுடனே வைத்துக்கொண்டுள்ளார்.

Chloe Lee தனது 6 வயதில் Nicky என்ற பூனையை வளர்க்க தொடங்கியுள்ளார். அந்த பூனை 16 வருடங்கள் அவருடன் பாசமாக வளர்ந்தது.

அனால், 2020-ல் வயதின் காரணமாகா அந்த பூனை உயிரிழந்தது. குழந்தை பருவத்தில் இருந்து தன்னுடன் இருந்த செல்லப்பிராணியை பிரிய அவருக்கு மனமில்லை. மேலும், தனது நிக்கி புழுக்களுக்கு இரையாவதையும் அவர் விரும்பவில்லை.

தினமும் செத்துப்போன பூனையுடன் தூங்கும் பிரித்தானிய இளம்பெண்! செல்லப்பிராணி மீதான காதலால் பயின்றுவரும் படிப்பு | Woman Sleeps With Dead Pet Cat 2 Years Chloe LeeImage: News Group Newspapers Ltd & Lincolnshire Echo/James Turner

எனவே, இறந்துபோன விலங்குகளை Stuffing (இறந்துபோன மிருகத் தோலுக்குள் துணி அல்லது பஞ்சு வைத்து அடைக்கும் முறை) செய்து உயிருடன் இருக்கும் மிருகத்தை போல வைத்துகொள்ளும் டாக்ஸிடெர்மியை (taxidermy) புத்தகங்கள் மற்றும் யூடியூப் வீடியோக்களில் இருந்து லீ கற்றுக்கொண்டார்.

அவரே தனது பூனையை டாக்ஸிடெர்மி செய்து வீட்டில் படுக்கை அறைகளில், சோபாக்களின் தன்னுடன் எப்போது வைத்துக்கொள்கிறார். இரண்டு ஆண்டுகளாக நிக்கி taxidermy செய்யப்பட்டு அவருடன் இருக்கிறது.

தினமும் செத்துப்போன பூனையுடன் தூங்கும் பிரித்தானிய இளம்பெண்! செல்லப்பிராணி மீதான காதலால் பயின்றுவரும் படிப்பு | Woman Sleeps With Dead Pet Cat 2 Years Chloe LeeITV

இறந்த பிறகு 50 மணிநேரங்களுக்கு மேலாக தனது பூனையை முறையாக பதப்படுத்தி வைத்த பிறகு லீ அதனை stuffing செய்தார்.

விலங்குகள் மீது காதல் கொண்டவரான Chloe Lee இப்போது டாக்ஸிடெர்மியை முறையாக பாடமாக பயின்று வருகிறார். 

தினமும் செத்துப்போன பூனையுடன் தூங்கும் பிரித்தானிய இளம்பெண்! செல்லப்பிராணி மீதான காதலால் பயின்றுவரும் படிப்பு | Woman Sleeps With Dead Pet Cat 2 Years Chloe LeeNews Group Newspapers Ltd



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.