கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக லவ் டுடே என்ற படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ளார். டி ஆர் ராஜேந்திரன், ஹிப் ஹாப் தமிழா என இவர்களது வரிசையில் இணைந்துள்ளார் பிரதீப். பாடல்கள் முதற்கொண்டு இவரே எழுதியுள்ளார். லவ் டுடே படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்த்து அதிகமாக இருந்தது. மேலும் புரமோசன்களுகும் சிறப்பாக அமைந்தது இருந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
ஹீரோ பிரதீப் மற்றும் ஹீரோயின் இவானா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டதாக நினைத்துக் கொண்டு உள்ளனர். இவர்களின் காதல் இவானவின் அப்பர் சத்யராஜுக்கு தெரிய வருகிறது. அவர் இருவரையும் அழைத்து இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிப்பதாகவும், ஆனால் ஒரு நாள் மட்டும் இருவரும் தங்களது மொபைல்களை மாற்றிக் கொள்ளுமாறு சொல்கிறார். இதன் பின் என்ன ஆனது என்பதே லவ் டுடே படத்தின் கதையாகும்.
இந்த காலகட்டத்தில் காதல் எப்படி இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக லவ் டுடே படம் காட்டுகிறது. இந்தப் படம் தற்போது உள்ள இளைய சமுதாயத்திடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 19.6 முதல் 20.6 கோடி வரையும், உலகம் முழுவதும் 26.5 முதல் 27.5 கோடி வரை வசூல் வேட்டை நடைப்பெற்று வருகிறது. அதேபோல் இரண்டாவது நாள் முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் 6.6 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோல் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 9.5 கோடி வசூல் செய்துள்ளது. முடிவில் தமிழ்நாட்டில் மொத்தமாக 10.6 கோடியும் உலகம் முழுவதும் 15.5 கோடியும் வசூல் செய்துள்ளது.
இதற்கிடையில் லவ் டுடே படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு காரணமாக இப்படத்திற்கான காட்சிகளும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் லவ் டுடே படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.