கோழிக்கோடு, கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள், ‘ஹிஜாப்’ எனப்படும் முகம் மற்றும் தலையை மறைக்கும் துணியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள கோழிக்கோடு மாவட்டத்தில், ‘கேரள யுக்திவாடி சங்கம்’ என்ற பகுத்தறிவு அமைப்பின் சார்பில், சுதந்திரமான சிந்தனை தொடர்பான கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
கருத்தரங்கம் முடிந்த பின், மேற்காசிய நாடான ஈரானில், ஹிஜாபுக்கு எதிரான பெண்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் ஹிஜாபை எரித்தனர்.
ஹிஜாப் விவகாரத்தில், இப்படிப்பட்ட போராட்டம் நம் நாட்டில் நடப்பது இதுவே முதல்முறை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement