கோவை கார் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும், வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் எதிரே கார் ஒன்று வெடித்தது. இதில் முபீன் என்ற நபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பலியான முபீனுக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், இவரிடம் தொடர்பில் இருந்த ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், அவர்களை மீண்டும் கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். புழல் சிறையில் ஏற்கனவே தீவிரவாதிகளை சிறை வைக்கப்பட்டு இருப்பதால், அவர்கள் தற்போது கோவை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.