வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிட்னி: ”உலக கோப்பை பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும்,” என ஷேன் வாட்சன் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் ‘டி-20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. அரையிறுதியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் (நாளை), இந்தியா-இங்கிலாந்து (நவ. 10) அணிகள் மோத உள்ளன. இதில் வெல்லும் அணிகள் நவ. 13ல் மெல்போர்னில் நடக்கவுள்ள பைனலில் பலப்பரீட்சை நடத்தும்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி முன்னாள் ‘ஆல் ரவுண்டர்’ ஷேன் வாட்சன் கூறுகையில்,”டி-20′ உலக கோப்பை தொடரின் பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும் என எல்லோரும் விரும்புகின்றனர். சமீபத்தில் மெல்போர்னில் நடந்த ‘சூப்பர்-12’ போட்டியில் இரு அணிகள் மோதின.

அப்போது, ஆஸ்திரேலியா – நியூசிலாந்து போட்டிக்கான வர்ணனையில் ஈடுபட்டதால், துரதிருஷ்டவசமாக இப்போட்டியை ரசிக்க முடியவில்லை. தற்போது அனைத்து தரப்பில் இருந்து வரும் அறிக்கைகளின் படி, ‘இவ்விரு அணிகள் பைனலில் மோதினால் அது மிகச்சிறந்த போட்டியாக இருக்கும், ‘டிவி’யில்’ ரசிப்பதும் ‘ஸ்பெஷலாக’ இருக்கும்,”என்றார்.
இதற்கு முன் 2007ல் நடந்த முதல் ‘டி-20’ உலக கோப்பை தொடரின் பைனலில் இவ்விரு அணிகள் மோதின. இதுபோல, மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோத வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement