அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு| Dinamalar

ஹைதராபாத், தெலுங்கானாவில் சட்டவிரோதமாக சுரங்கம் நடத்தியதாகவும், அதன் வாயிலாக பணமோசடி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் கங்குலா கமலாகர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் கங்குலா கமலாகர்.

இவர் மீது சட்டவிரோதமாக சுரங்கம் நடத்தி, அதன் வாயிலாக பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது.

இந்நிலையில், கமலாகர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனை நடந்தபோது கமலாகர் தன் குடும்பத்துடன், மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய்க்கு சென்றிருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.