வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நாட்டின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்து உளவுத்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(நவ.,09) ஆலோசனை மேற்கொண்டார்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலை கண்காணிக்க மத்திய புலனாய்வு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள உளவுத்துறை அதிகாரிகளின் உயர்நிலைக்குழுக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(நவ.,09) டில்லியில் நடைபெற்றது.

ஆலோசனை
:
கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்புச் சூழல் மட்டுமின்றி பயங்கரவாதம், உலகளாவிய பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தல்கள், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக நிதியளித்தல், போதைப்பொருட்கள் பயங்கரவாதம் போன்றவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்து.
மேலும் பயங்கரவாத தொடர்பு, இணையவெளியின் சட்டவிரோத பயன்பாடு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளின் நடமாட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் மத்திய – மாநில பாதுகாப்பு முகமைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு அவசியம் என்பதால் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பங்கேற்பு
:
இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் , உளவுத்துறை இயக்குநர் மற்றும் நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement