கேரளா: பழுதாகி விமானம் சாலையில் தரையிறங்கியதாக பரவிய புரளி – நடந்தது என்ன?

விமானம் பழுதாகி சாலையில் தரையிறங்கியதாக சமூக வலைதளங்களில் பரவிய புரளியால் விமானத்தை பார்க்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பைபாஸ் சாலையில் குருவிப்புழா என்னும் பகுதியில் விமானம் ஒன்று பழுதாகி திடீரென சாலையில் இறங்கியதாக சமூக வலைதளங்களில் புரளி ஒன்று காட்டு தீ போல பரவியது.
image
இதை அடுத்து கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உட்பட அதன் சுற்றுவட்டார மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், விமானத்தை பார்ப்பதற்காக குவிந்தனர். இந்நிலையில், அங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரியவந்தது அது பல வருடங்களாக பழுதாகி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்த விமானம் என்பது.
image
இந்த விமானத்தை ஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனது ஹோட்டல் கட்டமைப்புக்காக ஏலத்தில் விமானத்தை வாங்கியுள்ளதாகவும், சாலை மார்க்கமாக ஹைதராபாத் வரை கொண்டுச் செல்லப்பட உள்ளதாகவும் தெரிகிறது. இந்த விமானத்தை பார்ப்பதற்காக அங்கு குவிந்த ஏராளமான பொதுமக்கள் விமானத்தை சுமந்து வந்த லாரி மீது ஏறி நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.