சென்னை: சட்டவிரோத பணிப் பரிமாற்ற வழக்கில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவியின் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
சட்டவிரோத பணிப் பரிமாற்ற வழக்கில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவி உட்பட 3 பேரின் சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் ஜாபர், தமிழக முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர், லேண்ட் மார்க் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த உதயக் குமார் ஆகியோருக்கு சொந்தமான ரூ.14.23 கோடி சொத்துகள் சட்டவிரோத பணிப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.