புதுடில்லி, நாடு முழுதும், 576 மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளை, ‘வீடியோ’வில் பதிவு செய்து, தாய்மொழி ஆய்வுப் பணியை, மத்திய உள்துறை அமைச்சகம் நிறைவு செய்தது.
கடந்த 6வது ஐந்தாண்டு திட்டத்தின் போது துவங்கி, மொழியியல் குறித்த ஆய்வு பணியில், மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. இந்த வரிசையில், ஜார்க்கண்ட் மாநில ஆய்வு பணிகள் முடிவடைந்துவிட்டன. ஹிமாச்சல் பிரதேசத்தில் முடிவடையும் நிலையில் உள்ளது. தமிழகம் மற்றும் உத்தர பிரதேசத்தில் ஆய்வு நடந்து வருகிறது.
இந்நிலையில், நாடு முழுதும் உள்ள 576 தாய்மொழிகளின் பேச்சு வழக்குகள் குறித்து தாய்மொழி ஆய்வுப் பணியை மத்திய அரசு துவங்கியது.
இதற்காக, 576 மொழிகளின் பேச்சு வழக்குகள், ‘வீடியோ’வில் பதிவு செய்யப்பட்டன. இந்த பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த வீடியோக்கள் தொகுக்கப்பட்டு, தேசிய தகவல் மையத்தின் வலை காப்பகத்தில் சேமிக்கப்பட உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement