திருமணத்திற்கு முன் பெரும் கோடீஸ்வரர்! மணவாழ்வில் இணைந்த சில நாட்களில் நடுரோட்டுக்கு வந்த பரிதாபம்


ஆடம்பரமான திருமணத்தால் நடுரோட்டுக்கு வந்த கோடீஸ்வரர்.

வாழ்வில் செய்த பெரிய தவறு என  நொந்து கொண்ட பரிதாபம்.

பெரும் கோடீஸ்வரர் ஒருவர் தனது திருமணத்தை ஆடம்பரமாக நடத்தியதால் நடுரோட்டுக்கு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதையடுத்து தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு இது தான் என நொந்து போயுள்ளார்.

நைஜீரியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோடீஸ்வர தொழிலதிபராக இருந்தார்.
அவருடைய தொழில் நன்றாக வளர்ந்து வந்த நேரத்தில் நண்பர்கள் சிலரும் அதில் முதலீடு செய்தனர்.
துரதிர்ஷ்டவசமாக அவர்கள் முதலீடு செய்த பிறகு தொழில் வீழ்ச்சியடையத் தொடங்கியது,

அவர் ஏற்கனவே தனது திருமணத்திற்கான திகதியை நிர்ணயித்துவிட்டதால் அதையும் தள்ளி போட முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து முதலீடு செய்த நண்பர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதற்கு பதிலாக தன்னிடம் இருந்த அனைத்து பணத்தையும் செலவழித்து மிக ஆடம்பரமான முறையில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன் பெரும் கோடீஸ்வரர்! மணவாழ்வில் இணைந்த சில நாட்களில் நடுரோட்டுக்கு வந்த பரிதாபம் | Millionaire Broke After Holding Wedding Money

Instagram 

தடபுடலான விருந்துகள், அனைவருக்கும் பரிசு, சொகுசு கார்கள் என அனைவர் முன்னும் கெளரவத்தை காட்ட ஆடம்பரமாக செலவு செய்தார்.

ஏனெனில் திருமணத்திற்கு பிறகு நஷ்டமடைந்த பணம் மீண்டும் கிடைத்து விடும் என நம்பினார்.
ஆனால் அது நடக்காத நிலையில் தற்போது பெரிய கடனாளி ஆகியுள்ளார்.

இதையடுத்து தான் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு இது என நொந்து போயுள்ளார்.
இந்த செய்தி சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் அதை பார்த்த பலரும் நீங்கள் சொந்த உழைப்பில் தான் வாழ்வில் முன்னேறினீர்கள்.
அதே போல மீண்டும் சொந்த காலில் நின்று ஜெயிப்பீர்கள் என தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.