சேலத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் இடைத்தரகர்கள், பெண்கள் பலரை கருமுட்டை விற்க வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் இடைத்தரகர்கள் வளர்மதி, அவரது கணவர் மதியழகன் மற்றும் ஈரோட்டை சேர்ந்த லதா ஆகியோர் பச்சிளம் பெண் குழந்தையை விற்பனை செய்ய கொண்டு வந்தபோது காவல்துறையினர் அவர்களை கையும் களவுமாக கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், லதா மற்றும் வளர்மதி இருவரும் 5-ற்கும் மேற்பட்ட பெண்களை கருமுட்டை விற்க வைத்ததுடன், பல்வேறு மாவட்டங்களில் உள்ள குழந்தைகளை விற்பனைக்கு பேரம் பேசியதும் தெரியவந்தது.