முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவியின் சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை அதிரடி.!

கடந்த 2006-2011

ஆட்சிக்காலத்தில், ஆளுங்கட்சிக்கு மிகவும் நெருக்கமான ஐ.பி.எஸ். அதிகாரியாக திகழ்ந்தவர் ஜாபர் சேட். 1989 பேட்ச் அதிகாரியான இவர், தமிழக காவல்துறையில் உளவுத்துறை ஐ.ஜி., சிபிசிஐடி டிஜிபி என பல உயர் பதவிகளை வகித்தவர். இந்தநிலையில், இவர் உளவுப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றிய போது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து நில ஒதுக்கீடு பெற்றுள்ளார். அவ்வாறு சென்னை திருவான்மியூரில் கோடி மதிப்புள்ள நிலத்தை பெற்று, வர்த்தக நோக்கில் அடுக்குமாடு குடியிருப்பு கட்டி, சட்டவிரோத பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து ஜாபர் சேட் மீது 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு அமலாக்கத்துறை இந்த வழக்கை எடுத்தது, விசாரணை மேற்கொண்டது. பல்வேறு ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டிடம், வீட்டு வசதி வாரிய நில ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வந்தது. இந்தநிலையில் ஜாபர் சேட் மனைவியின் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம், 2002 கீழ் வழக்குப் பதிவு செய்து, ஓய்வு பெற்ற ஜாபர் ஐபிஎஸ் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட்டின் மனைவின் பரவீன் ஜாபர் சொத்துக்களும், தமிழகத்தின் முன்னாள் முதல்வரின் செயலாளராக இருந்த ராஜமாணிக்கத்தின் மகன் துர்காஷங்கர், லேண்ட்மார்க் கட்டுமன நிறுவனத்தின் உரிமையாளர் டி. உதயகுமார் ஆகியோருக்குச் சொந்தமான ரூ.14.23 கோடி மதிப்பிலான

சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.