மூச்சு விட திணறும் ஜார்ஜ் டவுன்: சென்னையின் பழமையான பகுதியின் இன்றைய நிலை! 

சென்னை: சென்னையின் மிகப் பழமையான பகுதிகளுள் ஒன்று ஜார்ஜ் டவுன். இந்தப் பகுதி இன்று கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகிறது. மேலும், இந்தப் பகுதியில் போதுமான சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

சென்னை – ஜார்ஜ் டவுன் பகுதியில் சிறிய, பெரிய என்று பல வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்தப் பகுதியை மறு சீரமைப்பு செய்ய சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பாக அங்குள்ள பொதுமக்களிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் ஜார்ஜ் டவுன் பகுதியில் சூரிய வெளிச்சம், காற்றோட்டம் இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

  • 72 சதவீத மனைகள் 1000 சதுர அடிக்கு குறைவாக உள்ளன.
  • 50 சதவீத மனைகள் 1200 சதுர அடிக்கு குறைவாக உள்ளன.
  • 80 சதவீத மனைகள் 2400 சதுர அடிக்கு குறைவாக உள்ளன.
  • 93 சதவீத தெருக்களின் அகலம் 10 மீட்டருக்கு குறைவாக உள்ளது.
  • கழிவு நீர் மற்றும் மழை நீர் தேக்கம் காரணமாக 63 சதவீத சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
  • சாலையோர வணிகர்களின் 5 சதவீத பேருக்கு மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது.
  • 1.70 சதவீதம் பேருக்கு மட்டும் 500 மீட்டர் சுற்றளவில் பூங்கா மற்றும் விளையாட்டு திடல் வசதி உள்ளது.
  • 81 சதவீத பேர் பணிக்கு செல்ல மிதிவண்டி, இருசக்கர வாகனங்கள் பயன்படுத்துகின்றனர்.
  • 39 சதவீத பள்ளிகள் மட்டுமே 1 கி.மீ சுற்றளவில் உள்ளன.
  • ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள கட்டிடங்களில் 30 சதவீத கட்டிடங்கள் சேதம் அடைந்த நிலையில் உள்ளன.
  • 50 சதவீத வணிகர்கள் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
  • 63 சதவீத பேர் செயற்கை காற்றோட்ட வசதி தேவை என்று தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.