ரூ.65 கோடிக்கு பங்களா வாங்கிய பிரபல நடிகை| Dinamalar

மும்பை, மஹாராஷ்டிராவின் மும்பையில் இரட்டை அடுக்கு பங்களா வீட்டை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர், ௬௫ கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஸ்ரீதேவி, சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் தங்கியிருந்தபோது, ஹோட்டலில் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தார்.

இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி – திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர், ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இவர், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள பாலி ஹில் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள, மிக விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த மாதம் வீடு வாங்கியுள்ளார்.

இரண்டு தளங்களில் அமைந்துள்ள இந்த வீட்டில், தோட்டம், நீச்சல் குளம், கார் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

இந்த வீட்டின் விலை, ௬௫ கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. இது, கடந்த இரண்டு ஆண்டுகளில், இவர் வாங்கியுள்ள இரண்டாவது வீடு எனக் கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.