ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான திறமைகள் இருக்கும். அவற்றை வெளிக்காட்டிக் கொள்வதற்காகப் பல சிரத்தைகளை மேற்கொள்வார்கள். குறிப்பாக சிலர் தங்களுக்குத் தாங்களே சவால்களை ஏற்படுத்திக் கொண்டு 50 நாள்கள், 100 நாள்கள் வரை அந்தச் சவால்களைச் செய்வார்கள்.

அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த 31 வயதான அலெக்சாண்டர் டோமின்ஸ்கை (Alexander Tominsky), 40 நாள்கள் தொடர்ந்து, 40 வறுத்த முழுக் கோழியை உண்ணவிருப்பதாகத் தெரிவித்தார்.
வெவ்வேறு இடங்களில் ஒரு முழு சிக்கனையும் சாப்பிடும் அப்டேட்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக நவம்பர் 6-ம் தேதியன்று இந்தச் சவாலை முடித்துள்ளார்.
இந்தச் சவாலை நிறைவு செய்வதற்கு முன்பு, தான் முழு கோழியையும் உண்பதை நேரில் வந்து பார்க்கப் பொதுமக்களை டெலாவேர் ஆற்றில் உள்ள அணைக்கரைக்கு அழைத்துள்ளார். இதற்காக நகரம் முழுதும் போஸ்டர்கள் ஒட்டினார்.
40 consecutive days eating an entire rotisserie chicken #chicken pic.twitter.com/a4AoNWDLTa
— smooth recess (@AlexiconTom) November 6, 2022
அவர் முழு சிக்கனையும் சாப்பிடுவதைப் பார்க்க சுமார் 500 நபர்கள் வரை கூடியிருந்தனர். மேலும் இந்தச் சவாலில் இவர் சிக்கன் வாங்குவதற்காக 16 பவுண்டுகள் வரை செலவழிக்க நேரிட்டது.
இவர் முழு சிக்கனையும் சாப்பிட்டு இணையத்தில் பிரபலமடைந்ததால் தற்போது `பிலடெல்பியா சிக்கன் மேன்’ என்று அழைக்கப்படுகிறார்.