2023 பொங்கல் பரிசு இதுதானா? கடந்த முறை ஏற்பட்ட குளறுபடியால் தமிழ்நாடு அரசு புதிய முடிவு?

2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்காமல், ரொக்கமாக வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. 2022ம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து நியாயவிலைக் கடைகளின் வாயிலாக, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது.
image
அதன்படி, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், இதில் அதிக குளறுபடி நடந்ததாக எதிர்க்கட்சியினரும், சமூக வலைதளங்களின் மூலமாகவும் கடும் விமர்சனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தான், 2023ம் ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இந்த முறை எந்த பரிசு பொருளும் தராமல் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரூ.1000 பணம் தர முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில், இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.