கடலூர் மாவட்டத்தில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கூலித்தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் காட்டாண்டிகுப்பம் வீரன் கோவில் பக்கத்தில் உள்ள அரவங்காடு அருகே தனது தம்பியுடன் 9 வயது சிறுமி நடந்து வந்துள்ளார். அப்பொழுதுஅப்பொழுது காட்டாண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி தனுஷ் என்பவர் சிறுமியின் தம்பியிடம் வீட்டுக்கு போக சொல்லி 10 ரூபாய் கொடுத்துள்ளார்.
பின்பு சிறுமியை அங்கிருந்து தூக்கி சென்று ஆவாரம் காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதையடுத்து சிறுமி சத்தம் போட்டு கத்தியதால் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த சிறுமி இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் தனுசை கைது செய்தனர்.