`அதிகரிக்கும் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை'; ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?

இல்லாமை, இயலாமையை மறைத்துக் கொண்டு இங்கு பல நடுத்தர குடும்பங்கள், தங்களது அன்றாட வாழ்க்கையை கடந்து வருகின்றன. 

நடுத்தர வர்க்கத்தினரை குறித்த சமீபத்திய ஆய்வுகளின் முடிவை இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் பற்றிய மக்கள் ஆராய்ச்சி அமைப்பு (PRICE) வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் மூன்று பேரில் ஒருவர் நடுத்தர வர்க்கத்தினராக இருக்கிறார். இவர்களின் ஆண்டு வருமானம் 5 லட்ச ரூபாய் முதல் 30 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இந்த எண்ணிக்கையானது 2047-ஆம் ஆண்டில் இருமடங்காக இருக்கும். அதாவது மூன்றில் இருவர் நடுத்தர வர்க்கத்தினராக இருப்பார்கள்.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் நடுத்தர வர்க்க மக்களின் பங்கானது, 2004-2005-ல் 14 சதவிகிதமாக இருந்தது. 2021-22-ல் இந்த எண்ணிக்கை 31 சதவிதமாக உயர்ந்துள்ளது.

படிப்படியாக அதிகரித்து வரும் இந்த எண்ணிக்கை 2030-ல் 46 சதவிகிதமாகவும், 2047-ல் 63 சதவிகிதமாகவும் உயரும்.

மற்றொருபுறம் இந்தியாவில் ஆண்டுக்கு ரூ. 2 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் `சூப்பர் பணக்காரர்’களின் (Super rich) எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 1994-95-ல் 98,000-ஆக இருந்த எண்ணிக்கை, 2020-2021-ல் 18 லட்சமாக உயர்ந்துள்ளது.

money

2021- ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கும் 6.4 லட்ச பணக்கார குடும்பங்களை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. 

டெல்லி

1.81 லட்ச பணக்கார குடும்பங்களுடன் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது. 1.41 லட்ச பணக்கார குடும்பங்களுடன் குஜராத் மூன்றாவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாடு

1.37 லட்ச பணக்கார குடும்பங்களை கொண்டு `தமிழ்நாடு’ நான்காவது இடத்தில் உள்ளது. 1.01 லட்ச பணக்கார குடும்பங்களை கொண்டு பஞ்சாப் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.