இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் : பிரதமர் மோடி வழங்குகிறார்

சின்னாளபட்டி : காந்திகிராம பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி வழங்குகிறார்.

இந்திய சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார். இவர் படைத்த இசை சாதனைகள் ஏராளம். பத்மபூஷண் உள்ளிட்ட இந்திய அரசின் உயரிய விருதுகளையும் வென்றுள்ளார். சமீபத்தில் நியமன ராஜ்யசபா எம்பியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவரைப்போன்று மிருதகங்கத்தில் பல புதிய உக்திகளை புகுத்தியவர் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன். தனது பத்தாவது வயதில் முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். மிருதங்க வாசிப்பில் புதிய உத்திகள், புதுமைகளைப் புகுத்தினார். வட இந்திய இசைக்கலைஞர்களுடன் ஜுகல்பந்தி என்ற நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தினார். மாநில அரசின் விருதுகள், மத்திய அரசின் உயரிய விருதான பத்மவிபூஷண் போன்ற விருதுகளையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலையின் 36 வது பட்டமளிப்பு விழா நாளை நடக்கிறது. 2 ஆயிரத்து 200 பேருக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. பிரதமர் மோடி அவர்களுக்கு பட்டம் வழங்கி கவுரவிக்க உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.