உக்ரை அதிபருக்கு தனது ஆஸ்கர் விருதை வழங்கிய ஹாலிவுட் நடிகர்.!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை முதல் நாள் தொடங்கி ஆவணப்படமாக்கி கொண்டிருப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகரும் மற்றும் இயக்குனருமான சீன் பென். போர் நடக்கும் சூழலை ஆவணப்படுத்த அங்கு சென்ற சீன் பென் குறித்து, ‘உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த சீன் பென் இப்போது உக்ரைனில். அவரது தைரியத்திற்கும் நேர்மைக்கும் நமது நாடு அவருக்கு கடமைப்பட்டிருக்கிறது’ என உக்ரைன் அரசு தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் 2003ம் ஆண்டு ‘மிஸ்டிக் ரிவர்’ படத்திற்கும், 2008ம் ஆண்டு ‘மில்க்’ படத்திற்காகவும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்ற சீன் பென், தன்னிடம் உள்ள ஆஸ்கர் விருதை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு வழங்கியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டிற்கு மூன்றாவது முறையாக நேற்று சென்ற சீன் பென், உக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கியிடம் தனது ஆஸ்கார் விருதை நீட்டி, ‘நம்பிக்கையான உக்ரேனிய வெற்றியுடன்’ போர் குறையும் வரை அதை தன்னுடன் வைத்திருக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும் சீன் பென் கூறும்போது, ‘இது ஒரு குறியீடு உள்ள முட்டாள்தனமான விஷயம், ஆனால் இது உங்களுடன் இருந்தால், நான் நன்றாகவும் வலுவாகவும் இருப்பேன், மேலும் சண்டையிடுவதற்கு உத்வேகத்தை அளிக்கும்’ என்றார்.

சன்னிலியோன் இருந்த மேடையில் சர்ச்சை பேச்சு; நடிகர் சதீஷ் விளக்கம்!

சீன் பென்னின் செயலால் நெகிழ்ந்த ஜெலன்ஸ்கி, ‘உக்ரைனின் வெற்றியின் மீதான நம்பிக்கையின் அடையாளமாக, இந்த விருது போரினால் பாதிக்கப்பட்ட இந்த நாட்டில் இருக்கும்’ என்று கூறினார். அதைத் தொடர்ந்து பென்னுடன் கைகுலுக்கி, ‘இது மிகவும் அருமை! நான் கௌரவிக்கப்படுகிறேன். நாம் வெற்றி பெற வேண்டும்’ என்று கூறினார். ‘உறவுகளை வலுப்படுத்துதல், பிரபலப்படுத்துதல் மற்றும் உக்ரைனின் இறையாண்மையை ஆதரித்ததற்காக, ஹாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு ‘ஆர்டர் ஆஃப் மெரிட் ஆஃப் தி III’பட்டம் வழங்கி உக்ரைன் அதிபர் கெளரவித்தார்.

அந்த ஆளோட மூஞ்சகூட காட்டக்கூடாது… ஊடகங்களுக்கு பயங்கர கட்டுப்பாடு!

ரஷ்யாவிற்கு எதிரான போரில் வெற்றி பெற்றவுடன், மாலிபுவிற்கு விருதை மீண்டும் கொண்டு வருமாறு ஜெலென்ஸ்கியிடம் சீன்பென் வலியுறுத்தியுள்ளார். அதேபோல், 2022 ஆம் ஆண்டுக்கான அகாடமி விருது வழங்கும் விழாவிற்கு ஜெலென்ஸ்கிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பை அனுப்பாவிட்டால், தனது ஆஸ்கார் விருதை உருக்குவேன் என்று சீன்பென் பகிரங்கமாக அறிவித்தது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.