உயிர் பயத்தால் ஜி20 மாநாட்டை தவறவிடும் புடின்? வெளியான தகவல்


புடின் மீது ஒரு கொலை முயற்சிக்கு பெரிய வாய்ப்புள்ளதால் ஜி20 மாநாட்டை அவர் புறக்கணிக்கிறார் என ரஷ்ய அரசியல் ஆய்வாளர் கூறியுள்ளார்


கெர்சனில் தோல்வியடைந்த பிறகு, ஒரு பெரிய நாடான ரஷ்யாவின் நிலை கேள்விக்குறியாக உள்ளது – Sergey Markov 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தோனேஷியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டை புறக்கணிப்பதற்கு காரணம், படுகொலை செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தால் தான் என ரஷ்ய அரசியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியாவின் பாலி நகரில் வரும் 15ஆம் திகதி ஜி20 மாநாடு தொடங்குகிறது. இதில் ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இந்தியா உட்பட 20 நாடுகள் கலந்து கொள்கின்றன.

ஆனால் இந்த மாநாட்டிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் செல்லவில்லை என்ற தகவல் வெளியானது.

இதற்கான முதன்மை காரணங்களை ரஷ்ய அரசியல் ஆய்வாளர் Sergey Markov அடுக்கியுள்ளார்.

Vladimir Putin

Sputnik/AFP via Getty Images

  • பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் சிறப்பு பிரிவுகளில் இருந்து புடின் மீது ஒரு கொலை முயற்சிக்கு பெரிய வாய்ப்பு உள்ளது.

  • அவமானகரமான சூழ்நிலைகளுக்கு சாத்தியம் உள்ளது. உதாரணமாக, கெர்சனில் இருந்து பின்வாங்கியதால் சில இயலாத சமூக ஆர்வலர்களால் புடின் அவமானப்படுத்தப்படலாம் மற்றும் அனைத்து உலக ஊடகங்களும் ‘ரஷ்யாவின் ஜனாதிபதி நான்கு கால்களிலும் கீழே இருக்கிறார்’ என்ற தலைப்புடன் ஒரு படத்தை தெறிக்க விடுகிறார்கள்.

இதுபோன்ற சூழ்நிலைகளானது முற்றிலும் வெறி பிடித்த சில மேற்கத்தியர்களால் திட்டமிடப்பட்டுள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • கெர்சனில் தோல்வியடைந்த பிறகு, ஒரு பெரிய நாடான ரஷ்யாவின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. அவர்கள் அழுத்தம் கொடுப்பார்கள், மேலும் மென்மையான சரணாகதியைக் கோருவார்கள் என தெரிவித்துள்ளார்.   

உயிர் பயத்தால் ஜி20 மாநாட்டை தவறவிடும் புடின்? வெளியான தகவல் | Reason Behind Putin Misssing G20 Summit Bali

Trend News Agency



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.