கோயம்பேடு காய்கறி மார்க்கெட்… இப்படி விலை குறையும்னு எதிர்பார்க்கல- ஹேப்பி நியூஸ்!

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள மொத்த விற்பனை சந்தையானது மிகவும் பிரபலம். ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்று அழைக்கும் அளவிற்கு சிறப்பு பெற்றது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்திற்கும் அதிகமான சில்லறை கடைகள், 800க்கும் மேற்பட்ட பழக் கடைகள் அமைந்துள்ளன. கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் காய்கறிகள் தினசரி இறக்குமதி செய்யப்படுகின்றன.

இங்கிருந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் வணிகர்களும், பொதுமக்களும் வாங்கி செல்கின்றனர். இந்த மார்க்கெட்டில் நிர்ணயிக்கப்படும் விலையானது ஒட்டுமொத்த சென்னைக்கும் அடிப்படையாக விளங்குகிறது. இதைப் பின்பற்றி அண்டை மாவட்டங்களிலும் காய்கறி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கோயம்பேட்டில் காய்கறி இன்றைய தினம் (நவம்பர் 10) விலை குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு வரத்து அதிகரித்திருப்பது மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக கூறப்படுகிறது. நேற்றைய தினம் காலை மார்க்கெட்டிற்கு 650 வாகனங்கள் மூலம் 7 ஆயிரம் டன் காய்கறிகள் வந்து குவிந்தன. இன்று காலை நிலவரப்படி,

காய்கறிகள்குறைந்தபட்ச விலை (ரூபாயில்)அதிகபட்ச விலை (ரூபாயில்)1பீன்ஸ்20302பீட்ரூட்30503பாகற்காய்15354சுரைக்காய்20405கத்திரிக்காய்10206முட்டைக்கோசு5107குடை மிளகாய்20458கேரட்30409காளிபிளவர் – ஒன்றின் விலை203010சௌசௌ101211தேங்காய் – ஒன்றின் விலை172512கொத்தமல்லி405013வெள்ளரிக்காய்4814முருங்கைக்காய்306515கருணைக்கிழங்கு203016இஞ்சி306017பச்சை மிளகாய்202518வாழைக்காய் – ஒன்றின் விலை3819வெண்டைக்காய்103020எலுமிச்சை304021கோவைக்காய்233022மாங்காய்306023நூக்கல்152024வெங்காயம்203625சாம்பார் வெங்காயம்5010026உருளைக்கிழங்கு203527முள்ளங்கி81028அவரைக்காய்304529புடலங்காய்152530தக்காளி102031தக்காளி – நவின்102032சேனைக்கிழங்கு2025

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.