சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு கடிவாளம் டி.வி.எஸ்., உடன் களமிறங்கிய அமேசான்| Dinamalar

ஓசூர், :மின்சார போக்குவரத்து, கட்டமைப்புகள் மற்றும் இணைப்பு சேவைகளை வலிமைப்படுத்த ‘அமேசான்’ மற்றும் டி.வி.எஸ்., ஆகிய இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளன.

இந்நிலையில், அமேசான் பொருட்களை விநியோகிப்பதற்கு, டி.வி.எஸ்., நிறுவனத்தின் 2 மற்றும் 3 சக்கர வாகனங்களை உபயோகப்படுத்த உள்ளன.

அத்துடன், அமேசான் வணிக குழுமத்தின் இணைப்பு மற்றும் தளவாட போக்குவரத்து ஆகியவற்றுக்கு டி.வி.எஸ்., மின்சார வாகனங்களை பயன்படுத்தி, இரு நிறுவனங்களும் சோதனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்குடன், 2030க்குள், அமேசான் நிறுவனம், 1 லட்சம் மின்சார வாகனங்களை உபயோகப்படுத்த இலக்கு வைத்துள்ளது. அதன் ஒருபகுதியாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.