சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 18 பேர் வீடுகளில் என்ஐஏ சோதனை…

சென்னை: கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களின் இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. இன்று கோவை, சென்னை உள்பட 45 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவார அமைப்புடன் தொடர்புடைய 18 பேர் இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் 23-ந்தேதி அதிகாலை கார் வெடித்து, அதில் இருந்த   ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். இந்த காரில் வெடிகுண்டுக்கான பொருட்கள் இருந்தது தடயஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக உக்கடம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (27), பெரோஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை தற்போது ன்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரித்து வருகிறது. ஏற்கனவே நெல்லை, திருவாரூர் உள்பட பல இடங்களில்  சோதனைகள் நடைபெற்ற நிலையில், இன்று கோவை சென் உள்பட மாநிலம் முழுவதும்  45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள்சோதனை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் வந்த என்ஐஏ அதிகாரிகள் பலர்,  சென்னையில் பெரம்பூர், புதுப்பேட்டை, மண்ணடி, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் சுமார் 18 பேருக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் தனியாக சோதனை நடத்தி வருகின்றனர்.  சோதனை நடைபெற்று வரும்  18 பேரும் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்கங்களின் ஆதரவாளர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் இவர்கள் பண பரிவர்த்தனை மேற்கொண்டதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.