சோயிப் மாலிக்- சானியா மிர்சா தம்பதியினர் விவாகரத்து


விளையாட்டு துறையில் புகழ்பெற்ற காதல் ஜோடிகளான சானியா மிர்சா மற்றும் சோயப் மாலிக்கின் எல்லை தாண்டிய காதல் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

சானியா- சோயிப் மாலிக் இடையே மலர்ந்த காதல்

 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் மற்றும் ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்ற இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இருவரும் தங்களது 5 மாத காதல் வாழ்க்கை தொடர்ந்து 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

உலக விளையாட்டு துறையில் நாடு விட்டு நாடு மலர்ந்த காதல் தம்பதியினருக்கு இஷான் என்ற மகன் ஒருவரும் உள்ளார்.

சோயிப் மாலிக்- சானியா மிர்சா தம்பதியினர் விவாகரத்து | Sania Mirza And Shoaib Maliks Divorce Is Confirmed

அதிகாரப்பூர்வமான விவாகரத்து

கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இருவரும்  தற்போது முறைப்படி விவாகரத்து செய்து விட்டதாக சோயிப் மாலிக்கின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள சோயிப் மாலிக்கின் நிர்வாக குழுவில் உள்ள நபர் ஒருவர் வழங்கிய தகவலில், ஆம் இருவரும் தற்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று விட்டனர், என்னால் கூடுதல் தகவல்களை வழங்க முடியாது, ஆனால் சோயிப்பும், சானியாவும் பிரிந்து விட்டார்கள் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

சோயிப் மாலிக்- சானியா மிர்சா தம்பதியினர் விவாகரத்து | Sania Mirza And Shoaib Maliks Divorce Is Confirmed


பிரிந்து வாழும் சானியா

கணவர் சோயிப் மாலிக் தனக்கு துரோகம் செய்ததை சானியா கண்டுபிடித்ததை அடுத்து அவர் சில நாட்களாக இந்தியாவில் வசித்து வருகிறார்.

விவாகரத்து வதந்திகள் வெளிவர தொடங்கிய நேரத்தில், சானியாவின் ரகசிய  இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில், “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன? அல்லாஹ்வைக் காண!” என குறிப்பிட்டு பகிர்ந்து இருந்தார்.

மகனுக்காக மீண்டும் ஒன்றிணைந்த காதல் ஜோடி

சோயிப் மாலிக் மற்றும் சானியா மிர்சா ஆகியோரின் மகனான இஷானின் பிறந்தநாள் விழாவை இருவரும் சமீபத்தில் இணைந்து கொண்டாடினர், இது தொடர்பான புகைப்படங்களை சோயிப் மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அதில் சோயிப், நீங்கள் பிறந்தவுடன் வாழ்க்கையில் நாங்கள் மிகவும் அடக்கமாகிவிட்டோம், வாழ்க்கை சிறப்பு வாய்ந்ததாக இருந்தது, நாம் தினமும் ஒன்றாக இருப்பது இல்லை, ஆனால் பாபா உங்களை பற்றியும் உங்கள் புன்னகை பற்றியும் ஒவ்வொரு நொடியும் சிந்தித்து கொண்டு இருக்கிறேன்.

நீங்கள் கேட்கும் அனைத்தையும் அல்லாஹ் உங்களுக்கு வழங்குவார், உன்னை பாபாவும் அம்மாவும் மிகவும் நேசிக்கிறோம் என தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.

ஆனால் சானியா மிர்சா பிறந்தநாள் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.