வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தேசிய நலன் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளுக்கு, 30 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்று தனியார் டிவி சேனல்களுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செய்தி மற்றும் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்: செய்தி மற்றும் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புக்கான வழிகாட்டுதல்கள் கடந்த 2011ல் திருத்தப்பட்டன. அதன் பின் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, நம் நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.

நேரலை ஒளிபரப்புக்கு முன்னதாக அனுமதி பெற வேண்டிய அவசியம் இனி இல்லை; ஆனால், ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி குறித்து முன்னதாக பதிவு செய்ய வேண்டும்.தேசிய நலன் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளுக்கு, 30 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement