தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (நவம்பர் 10ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர்
தாராபுரம் துணைமின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
செல்லாம் பாளையம் துணை மின்நிலைய பகுதியில் மாதாந்திரபராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுகிறது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
தேவனூர் புதூர் துணை மின் நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுகிறது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
தூத்துக்குடி
திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் துணை மின் நிலையங்களில் இன்றுபராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
கடலூர்
நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.