தொழில் அமைச்சின் கீழ் இயங்குகின்ற தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் கடந்த 2020ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் அரச நிறுவனங்களுக்கிடையிலான உற்பத்தி திறன் போட்டி நடைபெற்றது.
இதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முதன்முறையாக பங்கு பற்றி சிறப்பு பாராட்டு பரிசினை ( ( Special Commendation ) ) வென்றது.
இதற்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று ( 09.11.2022 ) மொனராகலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அகமது ஷாபிர் கலந்து கொண்டு சிறப்பு பாராட்டு பரிசு ( Special Commendation ) சான்றிதழையும் பெற்றுக் கொண்டார்.