கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேலும், அடுத்து வரக்கூடிய 4 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, நாகை, திருவாரூர்,
மயிலாதுறை, சென்னை, வேலூர்,
ராணிப்பேட்டை, செங்கல்பட்டு,
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.