லண்டன், பிரிட்டன் ராணுவத்தில் பணியாற்றும் சீக்கிய வீரர்களுக்கு அவர்களுடைய மதத்தின் பக்தி பாடல்கள் அடங்கிய புத்தகம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணுவத்தில் சீக்கியர்கள் அதிகளவில் பணியாற்றுகின்றனர். பிரிட்டன் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு வழக்கமாக, பைபிள் மற்றும் கிறிஸ்துவ மதம் சார்ந்த பாடல்கள் தொகுப்பே வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சீக்கிய வீரர்களுக்கு, ‘நித்னம் குட்காஸ்’ எனப்படும் சீக்கிய மத பக்தி பாடல்களின் தொகுப்பு வழங்கப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் இந்த புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள மத்திய குருத்வாராவுக்கு இந்த புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, சீக்கிய வீரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பிரிட்டன் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு, பிரிட்டன் வாழ் சீக்கியர் அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement