மதுரை அருகே, தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியாகினர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அழகுசிறையில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் மதியம் வெடி விபத்து நேரிட்டது.
இதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த இடத்தில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.