மஹத் நடித்த ஹிந்திப் படத்தைப் பார்த்து வாழ்த்திய சிம்பு

தமிழில் 'மங்காத்தா' படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்தவர் மஹத் ராகவேந்திரா. அடுத்து விஜய் தம்பியாக 'ஜில்லா', 'சென்னை 28 இரண்டாம் பாகம்', அன்பானவன் அசராதவன் அடங்காதவன், வந்தா ராஜாவாதான் வருவேன், ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் 'பேக்பென்ச் ஸ்டூடன், பன்னி அன் செர்ரி' படங்களிலும் நடித்துள்ளார். 'பிக் பாஸ் சீசன் 2'விலும் போட்டியாளராகக் கலந்து கொண்டு பிரபலமானார்.

சிம்புவின் நெருங்கிய நண்பராக இருக்கும் மஹத், தற்போது ஹிந்தியில் 'டபுள் எக்ஸ்எல்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'லிங்கா' கதாநாயகி சோனாக்ஷி சின்ஹா, 'வலிமை' கதாநாயகி ஹுமா குரேஷி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கடந்த வாரம் அக்டோபர் 4ம் தேதி வெளிவந்த இந்தப் படம் மோசமான விமர்சனங்களையே பெற்றது.

இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை தனது சினிமா நண்பர்களுக்கு திரையிட்டுக் காட்டியுள்ளார் மஹத். அந்தக் காட்சிக்கு சிம்பு, எஸ்ஜே சூர்யா, ஜெய், வைபவ், நடன இயக்குனர் சாண்டி, தயாரிப்பாளர்கள் தயாநிதி அழகிரி, தனஞ்செயன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு படத்தைப் பார்த்து வாழ்த்தியுள்ளனர். தன்னுடைய முதல் ஹிந்திப் படத்தைப் பார்த்து வாழ்த்திய நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார் மஹத்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.