மாலே: மாலத்தீவு தலைநகர் மாலேயில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பத்து பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் சிலர் தமிழர்கள் எனக் கூறப்படுகிறது.
மாலத்தீவு தலைநகர் மாலேயில் உள்ள குடியிருப்பு ஒன்றில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் இன்று (நவ.,10) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். ஆனாலும் சிலர் தீ விபத்தில் சிக்கினர். இது தொடர்பாக மாலேயில் உள்ள அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‛தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீஸ் ஈடுபட்டுள்ளது’ என்றார்.
மேலும், உயிரிழந்தவர்கள் அண்டை நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் என்றும் கூறினார். மாலத்தீவின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தரப்பில், ‛தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக’ கூறப்பட்டது. ஆனால், அவர்கள் உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் அளிக்கவில்லை. இந்த நிலையில் உயிரிழந்தவர்களில் சிலர் தமிழர்கள் என கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement