தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர் : மீன்வளத்துறை ஆய்வாளர்
காலி பணியிடங்கள் : 24
வயது : 32- க்குள்
சம்பளம் : ரூ.35,900 – ரூ.1,13,500
கல்வித் தகுதி : தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி வாரியத்தால் வழங்கப்படும் மீன்வளத் தொழில்நுட்பம் மற்றும் ஊடுருவலில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது விலங்கியலை முக்கிய பாடமாக கொண்டு பட்டப்படிப்பு பயின்று இருக்க வேண்டும். அல்லது மீன்வள அறிவியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.
தேர்வு நடைபெறும் தேதி : 07.02.2023
தேர்வு கட்டணம் : தேர்வுக்கான பதிவுக்கட்டணம் ரூ.100
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் 11.11.2022 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.