முதலை வாயில் சிக்கிய 8 வயது சிறுவன்: உடலை புரட்டி எடுப்பதை பார்த்த பெற்றோர் கண்ணீர்


பிலிப்பைன்ஸின் மாட்டினா ஆற்றில் 8 வயது சிறுவனை முதலை ஒன்று உயிருடன் தண்ணீருக்குள் இழுத்துச் சென்று கொன்று இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர் கண்முன்னே உயிரிழந்த சிறுவன்

பிலிப்பைன்ஸ் நாட்டின் கோஸ்டா ரிகாவின் லிமோனில் உள்ள மாட்டினா ஆற்றுக்கு ஜூலியோ ஓட்டெரோ பெர்னாண்டஸ் ஜூனியர் என்ற 8 வயது சிறுவன் சென்றுள்ளார்.

அங்கு அதிர்ச்சி தரும் வகையில் ராட்ஷச முதலை ஒன்று அந்த 8 வயது சிறுவனை நீருக்கடியில் இழுத்து சென்று கொன்று உள்ளது.

முதலை வாயில் சிக்கிய 8 வயது சிறுவன்: உடலை புரட்டி எடுப்பதை பார்த்த பெற்றோர் கண்ணீர் | Crocodile Killed 8 Year Boy In Matina River Limon Jam Press

மகனின் உடலை முதலை ஒன்று தண்ணீருக்குள் எடுத்து செல்வதை பார்த்த சிறுவனின் பெற்றோர், மீட்க வழியேதும் கிடைக்காமல் அதிர்ந்து போய் கண்ணீருடன் நின்றுள்ளனர்.  

ராட்ஷச முதலையால் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட சிறுவனின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை.

ஊரை விட்டு வெளியேறிய பெற்றோர்

மகனின் இழப்பில் கலங்கிய பெற்றோர் ஜூலியோ ஓடெரோ சீனியர் மற்றும் மார்கினி பெர்னாண்டஸ் புளோரஸ் ஆகியோர் நகரை விட்டு வெளியேறி நிகரகுவாவுக்கு குடியேறியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் தெரிவித்த தகவலில், தங்களின் மீதமுள்ள நான்கு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக ஊரை விட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளனர்.

முதலை வாயில் சிக்கிய 8 வயது சிறுவன்: உடலை புரட்டி எடுப்பதை பார்த்த பெற்றோர் கண்ணீர் | Crocodile Killed 8 Year Boy In Matina River Limon Jam Press

மேலும் மாட்டினாவில் தொடர்ந்து வாழ்வது சாத்தியமில்லை, ஏனென்றால் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஜூலிட்டோவை நினைவுபடுத்தும் ஒன்றைக் காண்கிறோம், அது எங்களுக்கு நிறைய வலியை ஏற்படுத்துகிறது, இது எங்களுக்கு மிகவும் கடினம், எனவே நாங்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும் என சிறுவனின் தாய் மார்கினி தெரிவித்துள்ளார்.


உடலை கண்டறிவதில் சிக்கல்

சிறுவனை தாக்கியது எந்த முதலை என்று துல்லியமாக தெரியாததால், சிறுவனின் உடலை கண்டறிவதில் சிரமம் இருப்பதாக லிமோன் செஞ்சிலுவை சங்க அதிகாரி  Tatiana Diaz தெரிவித்துள்ளார்.

முதலை வாயில் சிக்கிய 8 வயது சிறுவன்: உடலை புரட்டி எடுப்பதை பார்த்த பெற்றோர் கண்ணீர் | Crocodile Killed 8 Year Boy In Matina River LimonGetty Images

முதலை சிறுவனின் உடலை குகைக்குள் எடுத்து சென்று இருக்கலாம், அது எந்த குகை, எந்த முதலை என்று தெரியாததால் ஒற்றை புள்ளியில் கவனம் செலுத்துவது கடினமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.