சிங்கப்பூர்: ‘ஏர் இந்தியா’ நிறுவனம், ‘சீனா டெவலப்மென்ட் பேங்க் ஏவியேஷன்’ நிறுவனத்திடமிருந்து, 6 விமானங்களை, குத்தகைக்கு வாங்கியுள்ளது.
‘டாடா’ குழுமத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம், 6 ‘ஏர்பஸ் ஏ320’ விமானங்களை, சி.டி.பி., ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து குத்தகைக்கு பெற்றுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம், அதன் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சேவைகளை விரிவுபடுத்தும் பொருட்டு, இந்த ஏர்பஸ் விமானங்களை வாங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விமானங்கள், அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, ஏர் இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி நிபுன் அகர்வால் கூறியதாவது: இது ஒரு முக்கியமான ஒப்பந்தமாகும். அதிநவீன விமானங்கள் வாயிலாக, எங்களது சேவையை விரிவுபடுத்த இந்த ஒப்பந்தம் உதவும். நிறுவன மாற்றத்தின் ஒரு முக்கியமான படியாகவும் இது அமையும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement