COP 27 மாநாட்டுடன் இணைந்து கடன் முகாமைத்துவம்  தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதி பங்கேற்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின்   முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா(Kristalina Georgieva), கானாவின் நிதி அமைச்சர் கென் ஒபோரி-அட்டா(Ken Ofori-Atta) மற்றும் மாலைதீவு மக்கள் மஜ்லிஸின் சபாநாயகர்  மொஹமட் நஷீட்(Mohamed Nasheed) ஆகியோருக்குமிடையில் கடன் முகாமைத்துவம் தொடர்பான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது.

எகிப்தின் ஷாம் அல்-ஷேக் நகரில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான COP 27  மாநாட்டுடன் இணைந்ததாக இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில்  காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர்  ருவன் விஜேவர்தனவும் கலந்துகொண்டார்.
 
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2022-11-09

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.