பத்தலந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை & பதவிதாரிகள் கல்லூரியில் இந்திய இராணுவ பிரதிநிதிகள்

இந்தியாவின், வெலிங்டனிலுள்ள பாதுகாப்புச்சேவைகள் அலுவலர் கல்லூரி மற்றும் புனேயிலுள்ள பாதுகாப்பு சேவைகள் தொழில்நுட்ப அலுவலர் கற்கைநெறியைச் சேர்ந்த நால்வரடங்கிய பிரதிநிதிகள் குழுவினர் 2022 நவம்பர் 07 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

பத்தலந்த பாதுகாப்புசேவைகள் கட்டளை & பதவிதாரிகள் கல்லூரியில் பயின்றுவரும் இலங்கை இராணுவத்தினருக்கான விசேட பயிற்சிகள் இந்திய அதிகாரிகளால் வழங்கப்பட்டிருந்தது. குறிப்பாக  புதிய இராணுவ தொழில்நுட்பம் மற்றும் நிகழ்காலத்திலும் எதிர்வரும் காலங்களிலும் அவற்றின் பயன்பாடுகள் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. நவீன வெடிமருந்து, இணையவெளி, விண்வெளி, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நவீன கால யுத்தத்தில் சமீபத்திய தொழில்நுட்ப போக்குகள் குறித்தும் இப்பாடநெறியில் உள்வாங்கப்பட்டிருந்தது.  இந்த விஜயத்தின்போது பாதுகாப்பு படைகளின் பிரதானி,  இலங்கை விமானப்படை பிரதம அதிகாரி, இலங்கை இராணுவ பிரதிப் பிரதம அதிகாரி, மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கட்டளை அதிகாரி ஆகியோரையும் இந்திய பிரதிநிதிகள் சந்தித்திருந்தனர்.

2. பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக சிறந்த தோழமையினையும் இயங்கு திறன்களையும் கொண்டிருக்கும் இந்திய இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கிய ஆதாரமாக அனுபவப் பகிர்வும் பயிற்சிகளும் காணப்படுகின்றன. இந்திய பாதுகாப்புப் படைகளின் பயிற்சி நிறுவனங்கள் இலங்கைக்கு ஆண்டுதோறும் சுமார் 1500 ஆசனங்களை (இராணுவம்-900, கடற்படை-350, விமானப்படை-250) ஒதுக்குதல் உட்பட முக்கியமான இருதரப்பு பயிற்சித் தொடர்புகளை இந்திய மற்றும் இலங்கை ஆயுதப் படைகள் பகிர்ந்து கொள்கின்றன. இலங்கை ஆயுதப் படைகளின் ஆளுமையைக் கட்டியெழுப்புவதில் இந்தியாவின் உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் இவ்வாறான ஈடுபாடு இந்தியாவின் “அயல் நாடுகளுக்கு முதலிடம்” கொள்கை மற்றும் இந்திய – இலங்கை ஆயுதப்படைகளுக்கு இடையிலான சுமூகமான உறவுகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதுடன், இதன்மூலமாக பிராந்திய சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையினை மேம்படுத்தவும் பங்களிப்பு வழங்குகின்றது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
11 நவம்பர் 2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.