இன்றைய இணைய உலகில் அனைத்து பயன்பாடுகளுக்கும் பாஸ்வேர்டு தேவைப்படுகிறது. ஸ்மார்ட்போன் லாக் ஓபன் செய்ய, கணினி அன்லாக் செய்ய, மெயில், சமூக வலைதள கணக்குகள் என அனைத்துக்கும் இந்த பாஸ்வேர்டு அவசியமான ஒன்று. இப்படி இருக்கும் சூழலில் பொதுவாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேறு குறித்த 2022-க்கான பட்டியலை நார்ட்பாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பெரும்பாலான வலைதளங்கள் தங்கள் பயனர்களிடம் வலுவான பாஸ்வேர்டுகளை உள்ளிடும் படி தெரிவிப்பது வழக்கம். ஆங்கில எழுத்துகள், எண்கள் மற்றும் ஸ்பெஷல் கேரக்டரை பயன்படுத்துமாறு அந்த தளங்கள் தெரிவிக்கும். ஏனெனில் பயனர்களின் தரவுகளுக்கு பாதுகாப்பு வேண்டி இது சொல்லப்படுகிறது.
ஆனாலும் சில பயனர்கள் எளிதான மற்றும் நினைவில் வைத்துக் கொள்ளும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவர். அப்படி பயன்படுத்தினால் ஹேக்கர்கள், சம்பந்தப்பட்ட பயனர்களின் தரவுகளை தட்டி தூக்க வாய்ப்புகள் அதிகம்.
இந்நிலையில்தான் பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேறு குறித்த 2022-க்கான பட்டியலை நார்ட்பாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ‘பாஸ்வேர்டு’ எனும் சொல்லை தங்களது பாஸ்வேர்டாக சுமார் 3.5 லட்சம் இந்தியர்கள் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பிக்பாஸ்கெட் எனும் சொல்லை தங்களது பாஸ்வேர்டாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியர்கள் பயன்படுத்தும் டாப் 10 பாஸ்வேர்டுகள்
- 123456
- bigbasket
- password
- 12345678
- 123456789
- pass@123
- 1234567890
- anmol123
- abcd1234
- googledummy