உலக அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில் கொரோனா தாக்கத்தின் விளைவாக சமீபகாலமாய் பிறப்பு விகிதம் கணிசமான அளவு குறைந்துள்ளது. அதேசமயம் இந்தியாவின் மக்கள்தொகை வழக்கம்போல் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இன்னும் சில ஆண்டுகளிலேயே மக்கள்தொகையில் இந்தியா சீனாவை விஞ்சிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உலகின் மக்கள்தொகை இன்றைய தேதியுடன் (நவம்பர் 15) 800 கோடி என்ற புதிய மைக்கல்லை தொட்டுள்ளது. 12 ஆண்டுகளில் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2010 இல் 700 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை 2022 இன் முடிவில் 800 கோடியாக ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, உலகின் 800 ஆவது கோடி குழந்தை பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் பிறக்கும் என்று ஐநா சபை அண்மையில் கணித்திருந்தது.
இந்த கணிப்பின்படியே, மணிலா நகரின் டோண்டோ பகுதியில் அமைந்துள்ள டாக்டர் ஜோர் பேபெல்லா மெமோரியல் மருத்துவமனையில் இன்று அதிகாலை 1:29 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஹாய் மோடி.. ஹலோ ஜின்பிங்; ஜி – 20 மாநாட்டில் திடீர் சந்திப்பு!
வின்சி மபன்சாக் என பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தையை உலகின் 800 ஆவது கோடி கருதி, பிலிப்பைன்ஸ் அரசு சார்பில் மருத்துவமனையில் விழா கொண்டாடப்பட்டது.
உலகின் மக்கள்தொகை 900 கோடியாக ஆக அதிகரிக்க இன்னும் 15 ஆண்டுகள் ஆகும் என்று ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.