நியூயார்க் :உலக மக்கள் தொகை, 800 கோடியை தாண்டியுள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை உள்ள நாடாக அடுத்த ஆண்டில் சீனாவை, இந்தியா முந்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறப்பு குறைந்து வருவதால், மக்கள் தொகை வளர்ச்சி வரும் ஆண்டுகளில் குறையும் எனக் கூறப்படுகிறது.
உலக மக்கள் தொகை, நேற்று 800 கோடியை தாண்டியுள்ளது. கடந்த ௧1 ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகையில், 100 கோடி பேர் இணைந்துஉள்ளனர்.
கடந்த 1800 களில் உலக மக்கள் தொகை 100 கோடியை எட்டியது. இதைத் தொடர்ந்து, 200கோடியை எட்டுவதற்கு120 ஆண்டுகள் ஆகின. கடந்த ௧௯௭5ல் ௪௦௦ கோடியை எட்டிய மக்கள் தொகை, 47ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
இதன்பின், மக்கள் தொகை இரட்டிப்பாகும் வாய்ப்பு இல்லை என்றே ஐ.நா., மக்கள் தொகை நிதி அமைப்பு தெரிவித்துள்ளது; அடுத்த சில ஆண்டுகளில் குழந்தை பிறப்பு குறையும். அதே நேரத்தில், மக்களின் ஆயுட்காலம் உயரும். இதனால், வரும் ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கம் என்பது சற்று குறைவாகவே இருக்கும்.
இது குறித்து ஐ,நா., மக்கள் தொகை நிதி அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த உலகம் தற்போது ௮௦௦ கோடி மக்களின் வாழ்விடமாக அமைந்துள்ளது; இது புதிய மைல்கல்; புதிய சாதனை. அதே நேரத்தில் 800 கோடி பேரின் நம்பிக்கை, கனவு, எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும். அனைவரும் இணைந்து, 800 கோடி பேரின் வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும்.
மக்கள் தொகை உயர்வு என்பது, நம் சமூகத்தின் பெரிய சாதனையாகும். வறுமை, பாலின பாகுபாடு குறைந்துள்ளது; மருத்துவ வசதிகள் அதிகரித்துள்ளது; கல்வி கிடைக்கிறது; பிரசவத்தின்போது பெண்கள் இறப்பது குறைந்துள்ளது; பிறக்கும்போதே குழந்தை இறப்பது குறைந்துள்ளது.
அதே நேரத்தில் மக்கள் தொகை, கடந்த ௧௦௦ ஆண்டுகளில் அசுரத்தனமாக வளர்ந்துள்ளது. சர்வதேச அளவில் வளர்ச்சி குறைந்துள்ள நிலையிலும், பொருளாதார சிக்கல் போன்றவை இருந்த நிலையிலும், மக்கள் தொகை வளர்ந்துள்ளது.
இதன்படி, 2037ல் மக்கள் தொகை, 900 கோடியையும், 2058ல் 1,௦௦௦ கோடியையும் எட்டும்.
வரும் 2080ல், 1,040 கோடியாக மக்கள் தொகை இருக்கும். இதன்பின், 2100 வரை இந்த நிலையே நீடிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகில் அதிக மக்கள் தொகை உள்ள நாடு என்ற பெருமையை சீனாவிடமிருந்து இந்தியா அடுத்தாண்டில் தட்டிச் செல்லும். தற்போது சீனாவின் மக்கள் தொகை, 142.6 கோடியாகும். இந்தியாவின் மக்கள் தொகை, 141.2 கோடியாகும்.
வரும் 2050ல் இந்தியாவின் மக்கள் தொகை, 166.8 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை, 131.70 கோடியாகவும் இருக்கும்.
இந்தியாவுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய மற்றொரு விஷயம், நம் நாட்டின் சராசரி வயது, 28.7 ஆண்டுகளாகும். அதே நேரத்தில், சீனாவின் சராசரி வயது,38.4 ஆண்டாகும்.
சர்வதேச சராசரி வயது, 30.3 ஆண்டாக உள்ள நிலையில், ஜப்பானின் சராசரி வயது, 48.6 ஆண்டாகும்.இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகையில், ௧௫ – ௬௪ வயதுடையோர் எண்ணிக்கை, 68 சதவீதமாக உள்ளது.
அதே நேரத்தில், 65 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை, ௭ சதவீதமாகும். வளர் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் அதிகமுள்ள நாடு என்ற பெருமை, 2030 வரை இந்தியாவுக்கு இருக்கும்.
@Image@
சிந்திக்க வேண்டும்!
மக்கள் பல்வேறு வகையான தாக்குதலுக்கு ஆளாகின்றனர். ஒரு பக்கம் பருவநிலை மாறுபாடு பிரச்னை என்றால், மறுபக்கம் விலைவாசி உயர்வு. மனித குடும்பத்தின், ௮௦௦ கோடியாவது உறுப்பினரை வரவேற்கும் நேரத்தில், எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும். மனித குலம் அமைதியாக, சுகாதாரமாக, மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழிமுறைகளை, ‘ஜி – ௨௦’ நாடுகள் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.அன்டோனியோ குட்டரஸ்பொதுச் செயலர், ஐ.நா.,
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்