காசி தமிழ் சங்கமம்… தமிழ் ஆர்வலர்களுக்கு வெளியான நற்செய்தி!

காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பண்டைய கலாச்சாரம், பாரம்பரியம், கல்வி, பொருளாதார மற்றும் சமூக தொடர்பை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வசதியாக, பாரதிய பாஷா சமிதி என்ற அமைப்பு வாரணாசியில்,. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நவம்பர் 16 முதல் டிசம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கருத்தரங்குகள், விவாத அரங்குகள், கலாசார-பாரம்பரிய நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் காசி தமிழ் சங்கமம் திட்டத்திற்கு, சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அறிவுசார் ஒத்துழைப்பை வழங்க உள்ளன. அத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற விருப்பமுள்ளவர்களை காசிக்கு இலவசமாக அழைத்துச் செல்லவும் சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வாரணாசிக்கு செல்பவர்களின் வசதிக்காக, ராமேஸ்வரம்- வாரணாசி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நவம்பர் 16,23,30 மற்றும் டிசம்பர் 7, 14 ஆகிய தேதிகளில் மூன்றடுக்கு ஏசி வசதிக்கொண்ட மூன்று பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.