கோயம்புத்தூரில் காருக்கு போட்ட பெட்ரோலுக்கு பதில் தண்ணீர் இருந்ததால் கால் டாக்ஸி டிரைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சீத்தாபுதூர் பகுதியைச் சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் ரமேஷ் இன்று காலை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் காருக்கு பெட்ரோல் போட்டுள்ளார்.
சிறிது தூரம் சென்றபின் கார் நின்றுவிட்டதால், மெக்கானிக்கை அழைத்து காரை பரிசோதனை செய்ததில் பெட்ரோல் டேங்க்கில் தண்ணீர் இருந்துள்ளது.
உடனே பெட்ரோல் பங்கிற்கு சென்று கேட்டபோது, அங்கிருந்தவர்கள் சரியான பதிலை சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் நந்தகோபாலிடம் கேட்டபோது, இந்தியன் ஆயில் நிறுவன பொறியாளர்களிடம் பேசி உள்ளதாகவும், அவர்கள் வந்து பெட்ரோல் பம்பை ஆய்வுக்கு உட்படுத்துவார்கள் என தெரிவித்தார்.