தோனியின் மாஸ்டர் பிளான்…”ஜடேஜாவுக்கு OK பிராவோவுக்கு NO” சிஎஸ்கே அணியின் வீரர்கள் பட்டியல்



சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய 2023ம் ஆண்டுக்கான தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, ராயுடு ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர், பிராவோ, ராபின் உத்தப்பா மற்றும் ஜெகதீசன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அணியில் ஜடேஜா

கடந்த முறை கேப்டன் பதவியில் ஏற்பட்ட குளறுபடியால் ரவீந்திர ஜடேஜா கோபமடைந்தாகவும், இதனால் வரப்போகும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஜடேஜா விலகுவார் என்றும் தொடர்ந்து செய்திகள் வெளிவந்தன.

அத்துடன் ஜடேஜாவுக்கு பதிலாக டெல்லி அணியிடம் இருந்து அக்சர் படேலை சென்னை அணி மாற்றிக் கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள 2023ம் ஆண்டுக்கான தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் ஜடேஜா இடம் பெற்றுள்ளார், இதன்மூலம் வெளிவந்து கொண்டிருந்த வதந்திகளுக்கு சென்னை அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மேலும் இது தொடர்பாக ஜடேஜா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,  “அனைத்து நன்றாக உள்ளது, மறுதொடக்கம்”  என தெரிவித்து தோனிக்கு வணக்கம் வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இருப்பினும் இந்த ஆண்டு ஜடேஜா சிஎஸ்கே அணியின் கேப்டனாக மீண்டும் தொடருவாரா என்று தெரியவில்லை.

பிராவோ நீக்கம்

சிஎஸ்கே அணி தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் பிராவோ இடம் பெறவில்லை.

சென்னை அணியில் பிராவோ இடம்பெறாமல் போனது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அவர் ஏற்கனவே தனது ஓய்வை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்

2023ம் ஆண்டுக்கான சிஎஸ்கே அணியில் தோனி, ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், ராயுடு, மொயீன் அலி, தீபக் சாஹர் ஆகிய வீரர்களை சென்னை அணி தக்க வைத்துள்ளது.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

பிராவோ, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், ராபின் உத்தப்பா, கிறிஸ் ஜோர்டன், நாராயணன் ஜெகதீசன், பகத் வர்மா, KM ஆசிப் போன்ற வீரர்களை சிஎஸ்கே நிர்வாகம் விடுவித்துள்ளது. 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.