பட்டியல் இன மக்கள் குதூகலம்; தமிழ்நாடு அரசு செம அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்கள் முன்னேற்றத்திற்காகவும், அவர்களது வாழ்க்கை தரம் உயரவும் பலர் அரிய தொண்டை ஆற்றி வருகின்றனர். இவ்வாறாக பட்டியல் இன மக்கள் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டு அவர்கள் ஆற்றி வரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி, தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.

அவ்வகையில் 2022ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களை பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்கிற இணையதளத்தில் இருந்து விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகம், சென்னை- 5 அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும் விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.